அக்கரைபற்று பொலிஸ் பிரிவிலுள்ள சில பகுதிகளின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டது!

0

நாட்டின் சில பகுதிகளின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை இன்று  (06) அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி அக்கரைபற்று பொலிஸ் பிரிவிலுள்ள சில பகுதிகளின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

அக்கரைபற்று 05 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 14 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று நகர எல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பாலமுனை 01 கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஒலுவில் 02 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அட்டாளச்சேனை 08 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 8/1 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 8/3 கிராம உத்தியோகத்தர் பிரிவு, அக்கரைபற்று 09 கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.