அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிப் பேருந்து – சாரதி உட்பட 48 பேர் கைது

0

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தினை பொலிஸார் தடுத்துள்ளனர்.

இதன்போது பேருந்தின் சாரதி உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த பேருந்து, இங்கினியாகலா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று இரவு பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் குறித்த பேருந்து பயணிகளுடன் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.