அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

0

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

இதன்படி அக்கறைப்பற்று பகுதியில் இருந்து 10 பேரும் சாய்ந்தமருது பகுதியில் ஒருவரும் காத்தான்குடி பகுதியில் இருவரும் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.