அடக்குமுறையை கையாண்டாலும் பேரணி தொடரும் – சுமந்திரன்

0

தடுத்த நிறுத்த அடக்குமுறையை கையாண்டாலும் பொலிகண்டி வரை நிச்சயம் செல்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

எனவே அனைத்து தமிழ் உறவுகளையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அடக்குமுறைகள், வடக்கு கிழக்கின் நில அபகரிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு அனைத்து விதமான மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் முகமாகவும் அகிம்சை முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.