அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என எச்சரிக்கை!

0

இலங்கையின் கொரோனா நிலைமையை தீர்மானிப்பதில் அடுத்த சில வாரங்கள் தீர்மானமிக்கதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சமித் கினிகே இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பது முக்கியமான விடயமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாடு பாதுகாப்பாக உள்ளது என்பது இதன் அர்த்தமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, நாங்கள் இன்னமும் ஆபத்திலிருந்து மீளவில்லை என தெரிவித்த அவர், ஒமிக்ரோன் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க மாத்திரமே முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.