அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார்? மஹிந்தவிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர்

0

அடுத்த பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளவர் யார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்டது.

கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரே இவ்வாறு கேள்வி எழுப்பியதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ அடுத்த பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என்றால் எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வேறு யாரும் பிரதமர் வேட்பாளராக களமிறங்கினால் பிரச்சினைகள் உள்ளதென பிரதமரிடம் குறித்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் வேட்பாளர் தொடர்பான சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளும் வகையில் கடந்த வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சென்று சந்தித்த அமைச்சர், இந்த கேள்வியை கேட்டுள்ளார்.