இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்தில் கோவிட் தொற்று தீவிரமடையும் ஆபத்துக்கள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொற்று நோயின் தீர்மானமிக்க சந்தர்ப்பத்திற்கு நாடு என்ற ரீதியில் முகம் கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு தொற்று நோயின் தீர்மானமிக்க சந்தர்ப்பத்திற்கு வந்துள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் தொற்றுநோய் நிலைமை மிக மோசமான நிலையில் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனினும் இது ஜுன் மாதத்தில் தீவிரமடையும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
நாங்கள் இப்போது எங்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.