அனைத்து அரச ஊழியர்களும் அடுத்த வாரம் முதல் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
10 ஆம் திகதி முதல் டிக்கட் ஒதுக்கிக் கொண்டவர்கள் மாத்திரமின்றி அனைவரும் பயணிப்பதற்கு அனுமதி வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனால் போக்குவரத்து தொடர்பில் சிக்கல் ஏற்படாதென செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.