அணைப்போரையும் அணைத்த கொரோனா

0

தீயணைப்பு திணைக்கள தலைமையகத்தின் இரண்டு ஊழியர்கள், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளதாக தீயணைப்பு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்துக்கு அடுத்த மாதம் 1 ஆம் திகதி முதல் சேவைக்கு அனுப்பப்பட இருந்த 10 தீயணைப்பு படை வீரர்கள் அடங்கிய குழு, நேற்று (27) பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இன்று கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் முடிவுகளின்படி, குழுவின் இரண்டு தீயணைப்பு படை  வீரர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் கூறினார்.

இருவரும், தலைமையகத்திலுள்ள இரண்டு முகாம்களில் தங்கியிருந்தனர் என்று குறிப்பிட்ட அதிகாரி, அந்த முகாம்களில் அவர்களுடன் தங்கியிருந்த சுமார் 40 தீயணைப்பு படை வீரர்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.