அதிஅபாய வலயங்களிலுள்ள அரச நிறுவனங்களில் 20 வீதமான சேவையை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானம்!

0

அதிஅபாய வலயங்களிலுள்ள அரச நிறுவனங்களில் 20 வீதமான சேவையை அடுத்த வாரம் ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராட்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாவட்டங்களில் 50 வீதமான சேவையை அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா ஒழிப்பு செயலணியின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறைந்தளவான ஊழியர்களுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, சேவை நேரத்திற்குள் வெவ்வேறு நேரங்களில் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுக்கான சுற்று நிரூபம் விரைவில் வௌியிடப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.