அதிகாரிகள் வெளியிடும் கோவிட் புள்ளி விபரங்கள் முற்றிலும் பொய்யானது! – பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம்

0

கோவிட் வைரஸ் பரவல் சம்பந்தமாக அதிகாரிகள் வெளியிட்டு வரும் புள்ளிவிபரங்கள் முற்றிலும் பொய்யானது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், கோவிட் வைரஸ் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவல் குறித்து சரியான தகவல்களை கண்டறியாது சில அதிகாரிகள் புள்ளி விபரங்களை வெளியிடுவது நிலைமையை மேலும் மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கீழ் மட்டத்தில் உண்மையான தகவல்கள் தேவை எனில் அரசாங்கத்தில் பொறுப்புமிக்க பிரிவினர் எமது சங்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட வேண்டும்.

இதுவரை மேல் மாகாணத்தில் மாத்திரம் பெரிதாக பரவியிருந்த கோவிட் வைரஸ் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரவியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.