அதிக அளவிலான கொரோனா உயிரிழப்புகள் பதிவாகும் நிலை இரண்டு வாரத்தில் குறைவடையும் – சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே

0

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் திரிபுகளின் மூலம் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 55 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் உயிரிழப்புகள் பதிவாகும் நிலையே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக அளவிலான கொரோனா உயிரிழப்புகள் பதிவாகும் நிலை இரண்டு வாரத்தில் குறைவடையும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.