அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

0

அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் அல்லது பதுக்கும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மீள பயன்படுத்த முடியாத சாதாரண முகக் கவசம் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

N95 வகை முகக் கவசத்திற்கு 325 ரூபாய் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகளை விட அதிகரித்த விலையில் முகக் கவசங்களை விற்பனை செய்யும் மருந்தகங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என தேசிய மருந்தகங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் அல்லது அவற்றை பதுக்கும் நபர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் கமல் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.