உச்சபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் தேடுதல் நடவடிக்கையை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.
அதிக விலைக்கு கோழி இறைச்சியை வர்த்தகர்கள் விற்பனை செய்வது தொடர்பில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அதன் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
தோலுடன் கூடிய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் உச்சபட்ச சில்லறை விலையாக 430 ரூபாவும், தோல் நீக்கப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் உச்சபட்ச சில்லறை விலையாக 500 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்தது.