அதி அபாய வலயங்களில் பொதுமக்கள் வங்கித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வங்கிகள் திறக்கப்பட்டாலும், வழமை போல் கொடுக்கல், வாங்கல்களை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்க முடியாதுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
வங்கி கிளைகளில் உள்ளக மற்றும் வர்த்தக செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதி அபாய வலயங்களில் பொதுமக்களின் நாளாந்த வங்கித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.