அதி அவதானமிக்க 3 மாவட்டங்கள் – அதிவுயர் எச்சரிக்கை விடுக்கும் சுகாதார தரப்பு

0

கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களும் அதிக அவதானமிக்க மாவட்டங்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த மாவட்டங்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

இலங்கையில் தற்போது மிகவும் அவதானமான நிலைமை காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களை மாத்திரமன்றி, இலங்கையின் ஏனைய சில பகுதிகளிலும் கொவிட் தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்த வாரம், மிகவும் பொறுப்புடன் செயற்படுமாறு தாம் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தாம் எதிர்பார்த்த போதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

இந்த நிலைமையின் கீழ், பொதுமக்கள் 100 வீதம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.