அநுராதபுரத்தில் விளையும் வட்டக்காய்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தலையீடு

0

அநுராதபுரம் மற்றும் மஹவிலச்சிய பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வட்டக்காய் செய்கையிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ள பாரிய விளைச்சலை கொள்வனவு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் அநுராதபுரம் மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டக்காய் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை மாவட்ட செயலாளருக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கொள்வனவு செய்யப்படும் வட்டக்காய்களை அநுராதபுர மாவட்ட செயலாளரின் உதவியுடன் கொழும்புக்கு கொண்டுவந்து மாவட்டத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது வட்டக்காய் அறுவடையை அநுராதபுர மாவட்ட செயலாளருக்கு வழங்குமாறு அரசாங்கம் விவசாய சமூகத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.