அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

எந்தவொரு தொழிற்சங்கத்துடனும் நேரடி தொடர்பை கொண்ட அனைத்து அரச ஊழியர்களும் தேர்தல் காலத்தில் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச பணியாளர்கள் எவரும் அரசியல் உரிமை அல்லது அரசியல் உரிமையற்ற நிலையில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் ஒன்றுக்கூடல்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல இடங்களில் இருந்தும் அரச பணியாளர்கள் தேர்தல் வேட்பாளர்களுக்காக பிரச்சார நிகழ்வுகளை ஒழுங்குசெய்து கொடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பில் விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.