அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானம்!

0

அனைத்து திருமண வைபவங்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களை மீறி திருமண வைபவங்கள் இடம்பெறுவதாக தொடர்ந்து கிடைக்கப்பெறும் தகவல்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடித்தால் புதிதாக திருமண கொத்தணி ஒன்று உருவாகக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.