அனைத்து பள்ளிவாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிப்பு!

0

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் மீள் அறிவித்தல் வரை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் கலாசார விவகார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைய வக்பு சபையினனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலைமை வழமைக்கு திரும்பும் போது மீள பள்ளிவாசல்களை திறப்பது தொடர்பில் அறிவுறுத்தல் விடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.