அனைத்து பிரச்சனைகளுக்கும் இராணுவம் தான் தீர்வா?

0

யுத்தத்தில் ஈடுபடுவதற்கான பயிற்சி வழங்கப்பட்ட இராணுவத்தை அரிசி ஆலை விவகாரத்தை கையாள்வதற்கு அரசாங்கம் பயன்படுத்தியது என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு இராணுவத்தை எங்கு எப்போது பயன்படுத்துவது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க விவசாயம் பற்றியும் சந்தைப்படுத்தல் குறித்தும் விபரமுள்ளவர்களை அனுப்பவேண்டிய இடங்களிற்கு இராணுவத்தை அரசாங்கம் அனுப்பியது எனகுறிப்பிட்டுள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் விவகாரத்தை கையாள்வதற்கும் அரசாங்கம் இராணுவத்தை பயன்படுத்தியது இதன் காரணமாக இன்று எங்களிற்கு அரிசியில்லாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனால் இராணுவத்தின் கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது அரிசியை பதுக்கும் ஆலை உரிமையாளர்கள் குறித்து இராணுவத்திற்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.