அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை

0

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலையால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் சாத்தியமுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை சுமார் 20 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மேல், சப்ரகமுவ, தென், வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.