அனைவரும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும் – கரு ஜயசூரிய அழைப்பு!

0

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

‘ஒரே நாட்டவர் என்ற வகையில் தற்போது நாம் கொவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள புதிய சவாலொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறோம்.

இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் அரசியல், மதத்தலைவர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றுபட வேண்டும்.

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் நாடாளுமன்றமும் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க வேண்டும்“ என அவர் பதிவிட்டுள்ளார்.