அனைவரையும் கவலையுடன் நினைகூறுகின்றேன் – ஜனாதிபதி!

0

ஈஸ்டர் தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைகூறுகின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை தீவில் நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் அங்கச் சிதைவுகளை ஏற்படுத்தியதுமான பாரிய பயங்கரவாத குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுற்றுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகப்புத்தகத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி, “கொடூரமான உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு வருடம்.

இன்றைய தினம் இந்தத் தாக்குதலில் உயிர்நீத்த, காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அனைவரையும் கவலையுடன் நான் நினைகூறுகின்றேன்.

இலங்கையர்களாகிய அனைவரும் காலை 8.45 மணிக்கு விளக்கேற்றி ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துமாறு உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.