அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் மூலம் கொவிட் இல்லை என உறுதிபடக்கூற முடியாது

0

ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் மூலம் கொவிட் நோய்த் தொற்று இல்லை என உறுதிபடக்கூற முடியாது என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்து அதன் முடிவுகள் நெகடிவ் என கிடைக்கப்பெற்றாலும் அதன் ஊடாக அந்த நபருக்கு கொவிட் தொற்று எல்லை என துல்லியமாக கருதிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துரித கதியில் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்ளவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனை நடாத்தப்படும் நேரத்தில் கொவிட் இல்லை என காண்பிக்கப்பட்டாலும் சில நாட்களில் மீளவும் மேற்கொள்ளும் பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதியாகக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரிசோதனைகளின் மூலம் மட்டும் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியாது எனவும், மாறாக நோய்த் தொற்று ஏற்பட்டவர் தனிமையில் இருப்பது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே எழுமாறான அடிப்படையில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட், அதி ஆபத்தான வலயங்களுக்கு செல்வதனை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.