அபாய வலயங்களில் பணியாற்றும் பொலிஸாருக்கு PCR பரிசோதனை

0

கொரோனா தொற்று அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்ட பொலிஸாரை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளியொருவரை எவரேனும் தொடர்புகொள்ளும் பட்சத்தில், அது குறித்து உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து PCR பரிசோதனைகளுக்கான பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அபாயம் நிலவும் பகுதிகளுக்கு செல்லும் பொலிஸாருக்கு பாதுகாப்பு அங்கி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீதி தடைகளில், கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கையுறை மற்றும் முகக்கவசம் போன்றன கட்டாயமாக்கப்பட்டுள்ளது.