அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட வெலிசர கடற்படை முகாம்!

0

விடுமுறை நிமித்தம் சென்றுள்ள வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் அனைத்து கடற்படை உறுப்பினர்களையும்  உடனடியாக முகாமுக்கு அழைத்து வருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பொலனறுவை பகுதியில் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை உறுப்பினர்  ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பினை பேணிய கடற்படை உறுப்பினர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெலிசர கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதி கொரோனா தொற்று ஏற்படும் அபாய வலயமாக அறிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விடுமுறை நிமித்தம்  சென்றுள்ள வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் அனைத்து கடற்படை உறுப்பினர்களையும்  உடனடியாக முகாமுக்கு அழைத்துவருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அழைத்தவரப்படுபவர்களை  PCR பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.