அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்!

0

விமான நிலையத்தில் அமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது ஒத்துழைப்பும் முன்னரை விட அதிகமாக மரியாதையும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் சர்வதேச தோற்றுநோய் பரவலின் பிடியில் உள்ள இவ்வேளையில் வியன்னா பிரகடனத்தை விட ஒத்துழைப்பும், உயிர்களை காப்பாற்றுவதற்காக நாடொன்று பின்பற்றும் கட்டமைப்பை மதிப்பதுமே முக்கியமானது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இராஜதந்திரி இலங்கைக்கு சென்றமை இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா பிரகடனத்தின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளிற்கு உட்பட்ட விடயம் என தெரிவித்துள்ள அமெரிக்க தூதரகம் இது அமெரிக்கா செல்லும் இலங்கை இராஜதந்திரிக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.