அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் PCR பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசம்

0

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர்
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்​ PCR  பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.

இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது அவர் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த தூதரக அதிகாரி இன்று அதிகாலை 1.30 அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதேவேளை, தமது இராஜதந்திர பணியாளர்கள் இலங்கைக்கு வருகைதரும் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள், தரங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்தது.