அமைச்சரவையில் இணைந்து கொள்ளுங்கள் – தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சம்பிக்க அழைப்பு

0

நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுக்கு கரம்கொடுங்கள் முஸ்லீம் மற்றும் மலையககட்சிகளை போல அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஆங்கில நாளிதழிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒற்றையாட்சியில் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகிந்தராஜபக்சவுடன் இணைந்து போட்டியிடுகின்றவர்கள் ஜனநாயக சக்திகள் இல்லை என தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க மகிந்த ராஜபக்சவின் திகாமடுல்ல வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவபிரிவின் தலைவராக செயற்பட்டவர் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கள் கரங்களில் குருதிகறை படிந்தவர்கள் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் என குறிப்பிட்டுள்ள சம்பிக்கரணவக்க நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் ஜனநாயகரீதியிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்தேசிய கட்சி சமஸ்டிக்கு ஆதரவாக உள்ளது ஆனால் நாங்கள் அதனை ஆதரிக்கவில்லை எனவும் சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார்.

நாங்கள் அரசாங்கத்தை அமைப்பதற்கு எங்களுக்கு கரம்கொடுங்கள் முஸ்லீம் மற்றும் மலையககட்சிகளை போல அமைச்சரவை பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என நாங்கள் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் சம்பிக்கரணவக்க தெரிவித்துள்ளார்.