அமைச்சரவை மாற்றம் – பிள்ளையானுக்கு நோ? இராஜாங்க அமைச்சராகின்றார் நஸீர் அஹமட்?

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அமைச்சரவையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிள்ளையானுக்கு அமைச்சு பதவி வழங்கபடவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் எதிர்வரும் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தலினை அரசாங்கம் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாக முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையானை களமிறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக பஷில் ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான நஸீர் அஹமட்டிற்கு இந்த பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.