அமைச்சு பதவி கேட்பவர்கள் மீது ஜனாதிபதி அதிருப்தி

0

புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கட்சியின் பிரபல உறுப்பினர்கள் மற்றும் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற  சில வேட்பாளர்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு உபாயங்களை கையாண்டு மற்றும் நேரடியாகவும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படுதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக கோரிக்கை விடுத்துள்ள தரப்பினர் மீது கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், குறித்த தரப்பினருக்கு அமைச்சு பதவி கிடைக்கவிருந்த வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலையொன்று காணப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமைச்சு பதவிகளை கேட்ட தரப்பினரிடம் “நாட்டுக்கு சேவையாற்ற அமைச்சு பதவி அவசியமா?” என ஜனாதிபதி கேள்வி எழும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவி மற்றும் வரபிரசாதங்களை எதிர்பார்த்து அரசியலுக்க வரும் தரப்பினரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி பதவிகளை எதிர்பாராமல் நாட்டுக்காக சேவையாற்ற வரும் தரப்பினரே தனக்கு தேவை என்றும் கூறியுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

“அத”