தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கோகுலராஜ் என்பவரின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.