அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்!

0

அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 16ஆம் திகதி வரை சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதான இளைஞர், அவருடைய தந்தை மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.