அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்!

0

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மீட்பு பணிகளுக்காக இரண்டு கடற்படை கப்பல்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிய ரக விமானம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.