அம்பாறை சாகாமம் வம்மியடி காட்டுபகுதில் புதையல் தோண்டிய 4 பேர் கைது!

0

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று (வியாழக்கிழமை) மாலை சாகாம விசேட அதிரடிப்படையினர் கைது  செய்துள்ளனர்.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த காட்டுபகுதியை விசேட புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து முற்றுகையிட்டனர் இதன் போது பெரிய கல்பாறை ஓன்றை கல்லுடைக்கும் கொம்பஸ் இயந்திரம் மூலம் உடைத்து புதையல் தோண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து  ஜெனறேற்றர் ஒன்றும், கல்லுடைக்கும் கொம்பஸ் இயந்திரம், உட்பட பல உபகரணங்களையும் 3 மோட்டர்சைக்கிள்களையும் மீட்டனர்.

இதில், கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மாந்தோட்டம், வட்டினாக்கலை அம்பாறை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.