அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை விடுத்தது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக, பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் இதுகுறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடவடிக்கைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், உத்தியோகத்தர்களும், பங்கேற்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நிலவும் அபாயகரமான சூழலை கருத்திற்கொண்டு, ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.