அரசாங்கத்திற்கு தேரர் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

0

தேசியத்திற்கு முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கம் பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் வானில் தோன்றும் சூரியனையும் நிலவையும் கூட விட்டு வைக்குமாறு என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபயராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தேசிய வளங்கள் பிற நாட்டவர்களுக்கு விற்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

தவறை திருத்திக் கொண்டு அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட வேண்டும். இல்லவிடின் மகா சங்கத்தினரை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கி போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.