அரசாங்கத்தையும் மீறி நடமாட அனுமதி வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்

0

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரபல முஸ்லிம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நபர் ஒருவருக்கு நடமாடுவதற்கான அனுமதி பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபருக்கு புத்தளத்திலிருந்து வவுனியாவிற்கு சென்று வருவதற்கு  இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உரங்களை கொள்வனவு செய்வதற்கு  அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் பொலிசார் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் பயணளிக்கவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.