காய்ச்சல் அறிகுறிகளுடன் யாரேனும் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு பொதுமக்களிடம் அரசாங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமையின் அடிப்படையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த அறிவுறுத்தலை பின்பற்றாத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.