அரசாங்கம் மீண்டும் மற்றொரு முடக்கலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம்? விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

நாட்டைத் திறப்பதற்கு முன்னர், முறையான பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கோரியுள்ளார்.

இன்று செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர்,

பொது போக்குவரத்து சேவைக்கான சரியான திட்டங்கள், இல்லாவிட்டால், அரசாங்கம் மீண்டும் மற்றொரு முடக்கலுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார்.

நாட்டைத் திறந்த பின்னர், மக்கள் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாது. எனவே, முன்கூட்டியே திட்டங்களைத் தயாரித்து வெளியிடுவது முக்கியம் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள போக்குவரத்து, நடைமுறைகளில் நெரிசல் நீடிக்கும் வரை, கொவிட் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல என்று ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.