அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வரை தமிழரசு கட்சியினை விட்டு வெளியேற மாட்டேன்  – சாணக்கியன்!

0

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வரை தமிழரசு கட்சியினை விட்டு வெளியேற மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் இருந்து ஓய்வு பெரும் வரை இலங்கை தமிழரசு கட்சியினை விட்டோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினை விட்டோ தாம் வெளியேறப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிமையுடனான அபிவிருத்தியே தற்போதைய தேவை எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

சிலர் பணத்தினைப் பெற்றுக்கொண்டு கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் களமிறங்கியுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் குறுகியகால நோக்குடன் செயற்படுவதாகவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், தமிழர்களின் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கினை உரிமை கோரும் உரித்து முஸ்லீம்களுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திலும் சரி, அதற்கு வெளியிலும் பேரம் பேசும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்க வேண்டுமாக இருந்தால் கூட்டமைப்பினை மக்கள் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழனாக பிறந்த அனைவருக்கும் தமிழ் தேசியம் பேசும் உரிமை உள்ளது எனவும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை என்றால் எதிர்காலத்தில் தமிழன் என்ற ஒருவன் இருக்க மாட்டான் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும் வரை தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்துள்ளார்.