அரசியல் பழிவாங்கல் குறித்து முறைப்பாடு செய்ய குழு நியமனம்!

0

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவும், முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்காகவும் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் குறித்த குழு உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக மாத்தளை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக்கடிதம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் நேற்று(வியாழக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சியின்கீழ் பழிவாங்கல் படலம் தொடர்வதாகவும், நேர்மையாக செயற்படும் அரச ஊழியர்கள்கூட ஒடுக்கப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.