அரசியல் பிரமுகர்கள் பலரின் நினைவேந்தலுடன் மண்டூர் மகேந்திரனின் இறுதி அஞ்சலி நிகழ்வு

0

தந்தை செல்வாவின் கொள்கையால் கவரப்பட்டு சமூக சேவை புரிந்த தமிழ் தேசப் பற்றாளன் இறைபதம் அடைந்த மண்டூர் மகேந்திரன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று (20.06.2020) மட்டக்களப்பு-கல்லடி, உப்போடையில் அமைந்துள்ள அண்ணாரது இல்லத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் தமிழர்களின் இருப்புக்கு பாடுபட்டவர்களில் ஒருவரான மகேந்திரன் அவர்களின் அஞ்சலி நிகழ்வில் தமிழரசுக் கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம்,
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மற்றும் இரா.சாணக்கியன், அருண் தம்பிமுத்து ஆகிய அரசியல் பிரமுகர்கள் ஊர் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்டூர் மகேந்திரன் அவர்களின் தன்னலம் அற்ற சேவையினை பாராட்டி பலர் நினைவேந்தல் உரையாற்றினர். தொடர்ந்து அண்ணாரது பூதவுடல் கல்லடி-உப்போடை இந்து மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக கொண்டு செல்லப்பட்டது.