அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பில் அமுலுக்கு வரும் சட்டம்!

0

அலுவலகங்களுக்கு வரும் அரசாங்க ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பத்திக் அல்லது உள்நாட்டு ஆடையை அணிந்து வரவேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு கிடைத்த அமைச்சு தொடர்பில் ஊடகவியலாளர்கள் நாடாளுமன்றத்தில் வைத்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பத்திக், கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் பத்திக் கைத்தரி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பத்திக் ஆடை அணிந்தே நாடாளுமன்ற்திற்கு வருகைத்தந்திருந்தார்.

இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு ஆடை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.