அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

0

இன்று முதல் சகல அரச சேவையாளர்களும் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அனைத்து அரச நிறுவனங்களும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் சேவையினை முறையாக முன்னெடுத்து செல்வதன் ஊடாக நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேரம் வந்துவிட்டதாக அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைய, அனைவரும் கடமைக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சகல அரச அதிகாரிகளின் கடமையாகும்.

அது தொடர்பான பொறுப்பு சகல அரச நிறுவனங்களினதும் பிரதானிகளுக்கும் உண்டு என அவர் கூறியுள்ளார்.