அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க முடியும்!

0

ரயில் சேவை இன்று(திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கின்ற அரச மற்றும் தனியார் துறையினரே ரயிலில் பயணிக்க என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே பற்றுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்யும் போதும் ரயில் மேடைகளில் நிற்கும் போதும் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறு மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு ரயில் பெட்டியில் பயணிக்கக் கூடிய பயணிகளின் தொகை 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர ரயிலில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் துப்புவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இருமல் , காய்ச்சல் மற்றும் தடிமனுக்கு உள்ளாகியிருந்தால் ரயிலில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் ரயில்வே திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.