அரச விடுமுறை என தெரியாமல் கொடுப்பனவுக்காக காத்திருந்த முதியவர்கள்

0

நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு அரசாகத்தினால் மாதாந்தம் வழங்கப்படும் 2000 ரூபாய் கொடுப்பனவை பெற முதியோர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளிலும் முதியோர்கள் நேற்று காலை தபால் நிலையத்திற்கு முன்னால் காத்திருந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை குறித்த கொடுப்பனவுகள் தபால் நிலையத்திறற்கு அனுப்பப்படும்.

எனினும் புத்தாண்டினை முன்னிட்டு அரசாங்கத்தினால் நேற்றைய தினம் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறியாத முதியவர்கள் குறித்த கொடுப்பனவை பெற தபால் சிலையத்திற்கு முன்னால் காத்திருந்ததுடன், பணம் கிடைக்காமலேயே ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.