அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி

0

அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்கவின் உத்தரவின் படி வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, வெள்ளை மற்றும் சிகப்பரிசி ஒரு கிலோ கிராமின் விலை 93 ரூபாய் எனவும் வெள்ளை மட்டும் சிகப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 96 ரூபாய் எனவும் வெள்ளை மற்றும் சிகப்பு சம்பா கிலோ கிராம் ஒன்றின் விலை ரூ 98 ரூபா எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் விலை 120 ரூபா என அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறித்த அறிவித்தலில் காணக்கூடியதாக உள்ளது. 

குறித்த விலைகளை விட அதிக விலையில் விற்பனை செய்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல் எந்த ஒரு உற்பத்தியாளராலும், விநியோகஸ்தராலும் அல்லது வர்த்தகராலும் மேற்கொள்ளப்படக் கூடாது என குறித்து அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.