அரியவகை சுறாவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்!

0

திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் வலையில் சிக்கிய அரியவகை சுறாவை மீனவர்கள் பாதுகாப்பாக கடலுக்குள் மீண்டும் விட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றிருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் கடந்த காலங்களில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவில்லை.

இந்தநிலையில் அரசாங்கத் மீன்பிடிக்கான அனுமதியினை வழங்கிய பின்னர், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லறாவ மீன் பிடிகிராமத்தில் வசித்து வந்தவர்கள் கரை வலை மூலம் மீன்பிடிப்பதற்காக சென்ற வேளை குறித்த மீன் வலையில் சிக்குண்ட நிலையில் அந்த அரிய வகை சுறா மீன் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது.